உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 7 ரேஷன் கடைகளுக்கு ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் வினியோகிப்பதா?

7 ரேஷன் கடைகளுக்கு ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் வினியோகிப்பதா?

பொங்கலுார்; பொங்கலுார் ஊராட்சியில் ஏழு இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளன. எல்லா கடைகளிலும் மண்ணெண்ணெய் தவிர மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொங்கலுாரில் உள்ள மண்ணெண்ணெய் வினியோக மையத்தில் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. தொலைதுாரத்திற்கு சென்று மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என்று மாவட்ட வழங்கல் அலுவலரிடம் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொங்கலுாரில், 1,700 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஏழு நியாய விலை கடைகளுக்கும் ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றுவதால் ஐந்து கி.மீ., பொதுமக்கள் நடந்து சென்று மண்ணெண்ணெய் வாங்க வேண்டியுள்ளது.கூலி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலையை விட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை