உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சோளம் சாகுபடி பரப்பு குறைகிறதா?

சோளம் சாகுபடி பரப்பு குறைகிறதா?

திருப்பூர்: திருப்பூரில் அவிநாசி, சேவூர், பல்லடம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில், மானாவாரி சாகுபடியில் பெருமளவு விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இதில், கால்நடைகளின் உலர்தீவன பயன்பாட்டுக்காக, சோளம் சாகுபடி பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு சீசனிலும், 95 ஆயிரம் ஏக்கர் வரை, சோளம் விதைப்பு செய்யப்படுகிறது என, வேளாண் துறையினர் கூறுகின்றனர். விவசாயிகள் சிலர் கூறியதாவது: சீரான மழைப்பொழிவு இல்லாதது, நிலையான விலை கிடைக்காதது போன்ற பல காரணங்களால், சோளம் சாகுபடியை விவசாயிகள் பலர் கைவிட்டு விட்டனர். அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் கூட, கடந்த ஓராண்டாக அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் நிரப்பப்படுகிறது. இதனால், மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூட, இறவை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக சோளத்தட்டு, கால்நடைகளுக்கு தீவ னமாக பயன்படும் என்பதால், வட கிழக்கு பருவமழையின் போது, விதைப்பு செய்கின்றனர். தற்போது பரப்பு குறைந்து வருவதால், தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சோளத்துக்கு நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ