உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறந்த வெளி கழிப்பிடம் உள்ளதா?

திறந்த வெளி கழிப்பிடம் உள்ளதா?

திருப்பூர்: மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுல்தானா அறிக்கை:பிரதமரின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 6,047 கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன், மாநகராட்சி, 60 வார்டுகளிலும், இரண்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 386 வீடுகளில், கழிப்பிடம் கட்ட இட வசதி இல்லாதவர்களுக்காக, மாநகராட்சி மூலம், 205 நவீன கழிப்பிடங்கள் கட்ட பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதன் வாயிலாக மாநகராட்சி பகுதி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் பகுதிகள் ஏதும் இல்லை என மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதால், மாநகராட்சி பகுதியில் திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழித்தல், மலத்தினை நேரடியாக வடிகாலில் விடுவது ஆகியவை இல்லாத மாநகராட்சியாக அறிவிக்கை செய்து, சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஆட்சேபனை மற்றும் கருத்து இருப்பின், 15 நாட்களுக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !