உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிதல் நன்று

இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிதல் நன்று

திருப்பூர்: ''இணை நோய் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முககவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது,' என, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறினார்.நாட்டில் கொரோனா பாதிப்பு, 5,000த்தை கடந்துள்ளது; மாநிலத்தில், 150க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்த, தொடர் சிகிச்சையில் உள்ள இணைநோயாளிகள் நால்வர் இறந்துள்ளனர்.அரசு மருத்துவக் கல்லுாரி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், அத்தியவாசிய மருந்துகள் இருப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ள மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை அதிகாரிகள். இணை நோய் உள்ளவர்களை கவனமுடன் இருக்க அறிவுறுத்தி வருகிறது.

யாருக்கும் தொற்று இல்லை

திருப்பூர் சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறுகையில், 'பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பரவும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு, தொடரும் காய்ச்சல் பாதிப்பு கண்காணிக்கப்படுகிறது. தேவையிருப்பின் மொபைல் குழு முகாம் நடத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்; தற்போதைக்கு அப்படியொரு நிலை இல்லை. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யவில்லை. இணை நோய் உள்ளவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் முக கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது,' என்றார்.

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். சர்க்கரை நோய், ரத்த அழுத்த பாதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காசநோய்(டி.பி.,), எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் தொடரும் போது, பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயம். கிருமிநாசினி பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதலும், தன்சுத்தம் பேணுதலும் வேண்டும்.

- மாவட்ட சுகாதாரத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ