மேலும் செய்திகள்
கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்; கலெக்டர் திடீர் ஆய்வு
22-Jan-2025
உடுமலை: நான்கு ஆண்டுகளாக, புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் இழுபறியாக நடந்து வருகிறது; கலெக்டர் ஆய்வுக்கு பிறகும், எவ்வித மாற்றமும் இல்லாதது மக்களை வேதனையடையச்செய்துள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்ட் குறுகலாகவும், போதிய இடவசதி இல்லாமலும் உள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யும் அடிப்படையில், கடந்த, 2021ல், 3.75 கோடி ரூபாய் மதிப்பில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் துவங்கியது.பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே, 62 ஆயிரம் சதுர அடி காலி நிலத்தில், 15 பஸ்கள் நிறுத்துமிடம், காத்திருக்கும் அறை உள்ளிட்டவை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. நான்கு ஆண்டுகளாகியும், பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாக நடக்கிறது.வெளிப்புற சுவர்களில் ஓவியம் வரைவது உள்ளிட்ட பணிகள், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது; பஸ்கள் நிறுத்தும் பகுதியிலும் சில பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.பணிகள் இழுபறியாக நடப்பது குறித்து தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து, சில மாதங்களுக்கு முன், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அதன்பிறகும் பணிகளில் சுணக்கம் நிலவுகிறது. இதனால், உடுமலை பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறுவதால், பயன்பாட்டுக்கு வரும் முன்பே, புது பஸ் ஸ்டாண்ட், பழைய ஸ்டாண்ட் ஆக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
22-Jan-2025