உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைந்து பல நாளாச்சு... உறக்கம் கலைய அதிகாரிகள் மறந்தாச்சு!

குழாய் உடைந்து பல நாளாச்சு... உறக்கம் கலைய அதிகாரிகள் மறந்தாச்சு!

திருப்பூர்: திருப்பூர் நகரில் மெயின் குழாய் உடைந்து, 24 மணிநேரம் தண்ணீர் சாலையில் ஓடி, கால்வாயில் நிறைந்தும், குடிநீர் வடிகால்வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.பெருமாநல்லுார் - திருப்பூர் ரோடு, மில்லர் ஸ்டாப், முனியப்பன் கோவில் எதிர்புறம் மூன்றாவது குடிநீர் திட்ட மெயின் குழாய் உடைந்து, தண்ணீர் சாலை பிறிட்டு வெளியே வருகிறது. குடியிருப்பு வாசிகள், கல், மண் போட்டு அடைத்தும் நிற்காமல், பிரதான குழாயில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு வாரமாக தண்ணீர், இரவும், பகலும் வீணாகியும் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்யவே இல்லை.பொதுமக்கள் கூறுகையில், ''கோடையில் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான பகுதிகளுக்கு, பத்து நாட்கள், வாரம் ஒருமுறை ஒன்றரை மணி நேரம் முழுமையாக தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. பிரதான சாலையில் மெயின் குழாய் உடைந்து ஐந்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் பல ஆயிரம் லிட்டர் வீணாகியும், குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்ய முன்வரவில்லை. கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட வேண்டும். ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் விரயத்தை தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ