உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரிதன்யா உயிரிழப்புக்கு நீதி; நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

ரிதன்யா உயிரிழப்புக்கு நீதி; நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி; அவிநாசி, கைகாட்டிபுதுார் பகுதியை சேர்ந்த ரிதன்யா, 27, திருமணமான 78 நாட்களில் கணவர் வீட்டாரின் வரதட்சணை கொடுமை காரணமாக தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு, கடந்த மாதம் 28ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.ரிதன்யா பலியானதற்கு நீதி கேட்டு, நாம் தமிழர் கட்சியின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மகளிர் பாசறை உறுப்பினர்கள், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரிதன்யா உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். திருப்பூர் மகளிர் பாசறை நிர்வாகி அபிநயா, ஈரோடு சீதாலட்சுமி, கோவை நர்மதா, நீலகிரி சத்யா, அவிநாசி மண்டல செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், இளைஞர் பாசறை இளந்தமிழன் ஷேக் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி