உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கபடி அணி நாளை தேர்வு 

கபடி அணி நாளை தேர்வு 

திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெய்சித்ரா சண்முகம் அறிக்கை:தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், 50வது இளையோர் பெண்கள் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, வரும் நவ., 8 முதல், 10ம் தேதி வரை, திருவண்ணாமலையில் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட அணிக்கான வீராங்கனைகள் தேர்வு, நாளை (2ம் தேதி), 10:00 மணிக்கு, திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள மாவட்ட கபடி கழக மைதானத்தில் நடக்கிறது.கடந்த, 2004 அக்., 12ம் தேதிக்கு முன் பிறந்தவராக இருக்க வேண்டும். எடை, 65 கிலோவிற்குள் இருக்க வேண்டும். வயது சான்றிதழ் கொண்டு வர வேண்டும். செயற்கை ஆடுகளத்தில் போட்டி நடைபெறுவதால், அனைவரும் 'மேட் ஷூ' கொண்டு வர வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வீராங்கனைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, மாவட்ட கபடி கழகம் மூலம் திருவண்ணாமலை அழைத்து செல்லப்படுவர். பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், தகுதியுள்ள மாணவியரை தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ