உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கயம் காளை சிலை விவகாரம்; அரசியல் செய்யும் கம்யூனிஸ்ட்கள்: சிலை அமைப்பு சங்கம் கண்டனம்

காங்கயம் காளை சிலை விவகாரம்; அரசியல் செய்யும் கம்யூனிஸ்ட்கள்: சிலை அமைப்பு சங்கம் கண்டனம்

திருப்பூர்; காங்கயம் காளை சிலை அமைப்பு விவகாரத்தில் கம்யூ., கட்சியினர் பொய்பிரசாரம் செய்வதாக, சிலை அமைப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கயம் தாலுகா மா.கம்யூ., குழு உறுப்பினர் செல்வராஜ், அமைச்சர் நேருவுக்கு அனுப்பிய கடிதத்தில், 'காங்கயம் காளை சிலை வைக்கப்பட்டால், அதற்காக போராடியவர்களுக்கு பெயரும் புகழும் கிடைத்து விடும். குறிப்பாக, தி.மு.க.,வில் ஒரு தரப்புக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால், இந்த சிலை அமைப்பு பணி தாமதப்படுத்தப்படுகிறது,' என்று தெரிவித்திருந்தார். இது குறித்து, காங்கயம் காளை சிலை அமைப்புச் சங்க தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: கம்யூ., இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் சுய விளம்பரத்துக்காக, காங்கயம் காளை சிலை அமைப்பது தொடர்பாக மக்கள் மத்தியில், பொய் பிரசாரம் செய்கின்றனர்.அதில் எந்த உண்மையும் இல்லை. உண்மையிலேயே இதற்கான சிலை தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காளை சிலை தயாரித்து அதை நிறுவுவதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அதவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !