காங்கயம் தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா
திருப்பூர்: காங்கயம் தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.விழாவுக்கு, தலைமை விருந்தினராக, ஆண்டவர் தொழில் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியம் பங்கேற்று, தொழில் முனைவோரின் எதிர்காலம், தலைமைத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, திரைப்பட இயக்குனர் சுசீந்திரன் பங்கேற்றார். வருமான வரி அதிகாரியும், ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தலைவருமான ராஜ்குமார், விளையாட்டு மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் ராம்குமார், ஆண்டறிக்கை வாசித்தார்.காங்கயம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். மகேந்திரா கவுடா பேசுகையில், ''கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே கல்லுாரியின் நோக்கம்'' என்றார். கல்லுாரி மேலாண்மைக்குழு தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம், தாளாளர் ஆனந்த வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.