உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கேயம் தொழில்நுட்ப கல்லுாரி 157 மாணவர்களுக்கு பட்டம்

காங்கேயம் தொழில்நுட்ப கல்லுாரி 157 மாணவர்களுக்கு பட்டம்

காங்கயம் : காங்கேயம் தொழில்நுட்பக் கல்லுாரியின் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் ஆனந்தவடிவேல் துவக்கிவைத்தார். முதல்வர் ராம்குமார் வரவேற்றார்.'ராயல் என்பீல்டு' தொழில்நுட்ப நிபுணர் கணேஷ் நாகராஜன் பட்டமளிப்பு உரையில், ''இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகள், நேர்மை மற்றும் சமூகப்பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். 157 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.காங்கேயம் கல்விகுழும தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் பாலசுப்ரமணியம், தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர கவுடா, ஆராய்ச்சி மற்றும் தொழில் இணைப்பு இயக்குனர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ