மேலும் செய்திகள்
இளம் பெண்ணை தாக்கியவருக்கு சிறை
26-Dec-2024
திருப்பூர்; திருப்பூரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் டூம்லைட் மைதானத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் பிரகாஷ், 45. அவரிடம் திருப்பூர் காங்கயம் இளங்கோ லே அவுட்டை சேர்ந்த ரமேஷ், 44 கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது.கடந்த 26ம் தேதி இரவு, நிதி நிறுவன அலுவலகத்தில் பிரகாஷூம், ரமேஷூம் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.ரமேஷ் கத்தியால் பிரகாஷின் வயிற்றில் குத்தியுள்ளார். அதை தடுக்க சென்ற மேலாளர் சங்கீத ராஜன், யூசுப் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அருகேயுள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரனுக்கும் (அ.தி.மு.க.,), பிரகாஷூக்கும் நில ஆவணம் தொடர்பாக ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது. குணசேகரன் உள்ளிட்ட சிலரது துாண்டுதலில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என, நிதி நிறுவன மேலாளர் சங்கீதராஜன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், குணசேகரன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ரமேைஷ கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.
26-Dec-2024