உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவு ஏற்றி வந்த கேரள லாரி: பல்லடம் அருகே சிறைபிடிப்பு

கழிவு ஏற்றி வந்த கேரள லாரி: பல்லடம் அருகே சிறைபிடிப்பு

பல்லடம் : பல்லடம் அருகே, கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட, 3 டன் கழிவுகளை, பொது இடத்தில் கொட்டிய லாரி பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடுகபாளையம்புதுார் ஊராட்சி, ஆலுாத்துப்பாளையம் கிராமத்தில், நேற்று அதிகாலை கழிவுகள் ஏற்றியபடி வந்த லாரி ஒன்று, கழிவுகளை கொட்டி விட்டு புறப்பட்டது. தகவல் அறிந்த இப்பகுதி பொதுமக்கள் லாரியை விரட்டிச் சென்று சிறைபிடித்தனர்.பொதுமக்கள் எதிர்ப்பால், கழிவுகள் மீண்டும் அதே லாரியில் திருப்பி ஏற்றப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காமல் லாரியை எடுத்துச் செல்லக்கூடாது என, பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். சட்ட விரோதமாக, கேரளாவில் இருந்து கழிவுகளை பல்லடத்துக்கு கழிவுகளை அனுப்பியவர், வாங்கியவர், வாகன உரிமையாளர் ஆகிய அனைவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்வதுடன், எந்த வழியாக, இது போன்ற வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது என்பது குறித்தும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு சாமான்கள், சேர், சோபா உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கேரளாவில் இருந்து எடுத்து வந்து இங்கு கொட்டியுள்ளனர். தமிழகம் என்ன கழிவுகள் கொட்டும் குப்பை தொட்டியா? கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வரை பல சோதனைச்சாவடிகளை கடந்து லாரி எப்படி இங்கு வந்தது? கழிவுகள் எடுத்த வந்த லாரியை சிறை பிடித்து வழக்கு பதிவு செய்வதுடன், லாரி உரிமையாளருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்,' என ஆவேசப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaran
நவ 15, 2024 21:34

இது கேரளா அரசு செய்யும் தவறு ... ஆனால் பழி லாரி மேல் ... எங்கே உலகை நாயகன் ?..


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 20:29

இந்த பக்கம் பூரா தீவிரவாதத்தை தூண்டும் விதத்தில் கருத்துக்கள். வீட்டில் அல்லது ஆபீஸில் உக்காந்துண்டு உசுப்பேத்தி விட்டு, தீ விபத்து, போலீஸ் கைது நடவடிக்கை எல்லாம் நடந்தால், ஆ இது தான் திராவிட மாடலா என்று எழுதுவார்கள்.


அப்பாவி
நவ 15, 2024 17:47

எதுக்கு உட்டீன்க... லாரியோட குப்பையை கொளுத்தினா, அடுத்த முறை குப்பை வராது இல்லியா? தத்திங்க


Smba
நவ 15, 2024 16:29

போலீசு. புகார் எல்லாம் எடுபடாது: மாமுல் சரிகட்டி ம் உடனே லாரிய எரித்து விடனும் அதுவே சரியான தீர்வு


ديفيد رافائيل
நவ 15, 2024 11:00

சூப்பர் இதே மாதிரி அனைத்து இடங்களிலும் பொது மக்கள் களத்தில் இறங்க வேண்டும்


Gokul Krishnan
நவ 15, 2024 10:59

இது குறித்து வாய் திறக்க மாட்டனுக


Gokul Krishnan
நவ 15, 2024 10:57

சில தினங்கள் முன்பு கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் கேரள லாரிகள் இது போன்ற குப்பையை கொட்ட முயன்று கையும் களவுமாக தாசில்தார்வரை புகார் சென்றது


பெரிய ராசு
நவ 15, 2024 09:46

லாரியை எரிக்கவும், டிரைவர் கிளீனராய் தர்ம அடி அடித்து கை காலை ஒடுக்கவும், மறுபடியும் வண்டி ஓட்ட முடியாது, சட்டத்தை கையில் எடுக்க தூண்டுவது அரசாங்கமே


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2024 18:40

கருநாடகவிலும் கேரளத்தினர் வந்து மருத்துவ குப்பையை கொட்டிச்செல்கின்றனர்


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2024 08:03

எங்காவது ஒரு இடத்தில் லாரி எரிக்க முயன்றால் மீண்டும் வருவார்களா கேரளத்தினர் ?


புதிய வீடியோ