உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின் வெற்றி நடை தொடர்கிறது!

கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின் வெற்றி நடை தொடர்கிறது!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி., பப்ளிக் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி கடந்த, 12 ஆண்டுகளாக பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.இந்தாண்டு மனிதவியல் மற்றும் சமூகவியல் பாடப்பிரிவு மாணவி ஸ்வேதா, 500 மதிப்பெண்களுக்கு, 488 பெற்று மாவட்ட அளவிலும், பள்ளியில் முதலிடத்தை பிடித்தார். இரண்டாமிடத்தை 484 மதிப்பெண் பெற்று ஜோதிஷ், அறிவியல் பிரிவில் பிருந்தா, 482 மதிப்பெண் பெற்று மூன்றாமி டம், வணிகவியல் பிரிவில், பரத், 481 பெற்று, நான்காமிடத்தை பிடித்தனர்.ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் பொருளாதார பாடங்களில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், 95 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வை திறன் சவாலுடைய நிரஞ்சன் என்ற மாணவன், உருப்பெருக்கி உதவியுடன், தேர்வுக்கு படித்தும், தேர்வு எழுத உதவியாளர் மூலம் தேர்வு எழுதி, 452 பெற்று அசத்தியுள்ளார்.

பத்தாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு தேர்விலும், இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஜி.அஷ்வின், 493 பெற்று முதலிடம், எல்.அஸ்வின், 486 பெற்று இரண்டாமிடம், தரணிகா, 486 பெற்று, மூன்றாமிடம் பெற்றனர். மோனிஷ் மற்றும் வர்ஷா, 484 பெற்று, நான்காமிடம், காவியஸ்ரீ, 483 பெற்றுள்ளார்.மேலும், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என, அனைத்து பாடங்களிலும், 90 சதவீதத்துக்கு மேலாக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.தரவு அறிவியலில், ஏழு பேர் சதமடித்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கே.எம்.சி., பள்ளி நிர்வாக தலைவர் சண்முகம் ஐயா, பள்ளி தாளாளரும், செயலாருமான மனோகரன், தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, பள்ளி முதல்வர் தனலட்சுமி முரளிதரன் ஆகியோர் பாராட்டினர். கே.ஜி., முதல் பிளஸ்2 வரை அட்மிஷன் நடக்கிறது. சேர்க்கை தொடர்பாக, 73738 00808, 99656 23000, 99655 19394 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை