உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறன்மிகு தொழிலாளர் உருவாக்க பயிற்சி பின்னலாடை பிரின்டிங் துறை கைகோர்க்கிறது

திறன்மிகு தொழிலாளர் உருவாக்க பயிற்சி பின்னலாடை பிரின்டிங் துறை கைகோர்க்கிறது

திருப்பூர்: நவீன பிரின்டிங் இயந்திரங்களை இயக்கும் வகையில், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்க வேண்டும்; இதற்கேற்ப கைகோர்த்து செயல்பட திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ் அசோசி யேஷன் தயாராக உள்ளது.படித்து முடிக்கும் இளைஞர், இளம் பெண்கள் உயர்பணி களுக்கு செல்லவே விரும்பு கின்றனர். உற்பத்தி பிரிவுகளில் இருக்கும் பணிகளை தொடர பெரும் பாலானோர் முன்வருவ தில்லை. இதனால், திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகளில், வடமாநில தொழிலாளர் களின் தேவை அதிகரித் துள்ளது.இன்றைய கால கட்டத்திலும், திருப்பூருக்கு திறன்வாய்ந்த ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை என, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்திய, மாநில அரசு திட்டங்களில், திறன் பயிற்சி அளிக்கப்பட்டாலும் கூட, அது உற்பத்தி பிரிவுகளுக்கு மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது. பிரின்டிங், நிட்டிங், சாய ஆலைகள் போன்ற 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை இயக்க, திறமையான தொழிலாளர் கிடைப்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றம்

குறிப்பாக, பிரின்டிங் தொழில் கடந்த 10 ஆண்டுகளில், 20 மடங்கு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளது. இருப்பினும், புதிய தொழிலாளர்கள் உருவாக்கம் இல்லாததால், பழைய தொழிலாளர்களே, அனுபவ அடிப்படையில் இத்தொழில்களை தொடர வேண்டிய நிலை உள்ளது.''புதிய மெஷின்களை இயக்கத் தெரிந்தவருக்கு, நிறுவனங்கள் அதிக சலுகைகளை அளித்து ஈர்க்கின்றன. நவீன பிரின்டிங் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் மற்றும் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், அவற்றை இயக்குவதற்கான தொழிலாளர்களையும் பயிற்சி கொடுத்து தயார்படுத்த வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறப்பு பயிற்சிக்கு திட்டம்

திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரின்டர்ஸ்' அசோசியேஷன் - 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,''பல்வேறு நாடுகளில் இருந்து, நவீன பிரின்டிங் மெஷின்கள் இறக்குமதியாகின்றன. அவற்றை இயக்கத் தெரிந்த தொழிலாளர்களும் பிரத்யேக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; அதுபோன்ற தொழிலாளர் திருப்பூரில் மிகக்குறைவு. மெஷின்களை வினியோகம் செய்யும் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட வேண்டும்.புதிய மெஷின் வந்தால், அவற்றை இயக்க, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தி கொடுக்க வேண்டும். 'டெக்பா'வும், இத்தகைய பயிற்சி அளிக்க கைகோர்க்க தயாராக இருக்கிறது. பிரின்டிங் பிரிவுக்கு திறமையான தொழிலாளர்களை உருவாக்க, அனைவரும் ஒன்றுபட்டு திட்டமிட வேண்டும்,'' என்றார்.பல்வேறு நாடுகளில் இருந்து, நவீன பிரின்டிங் மெஷின்கள் இறக்குமதியாகின்றன. அவற்றை இயக்கத் தெரிந்த தொழிலாளர்களும் பிரத்யேக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; அதுபோன்ற தொழிலாளர் திருப்பூரில் மிகக்குறைவு. மெஷின்களை வினியோகம் செய்யும் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ