உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

உடுமலை; பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடந்த, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் விழா மற்றும் குடியரசு தினவிழாவையொட்டி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.இதில், கராத்தே போட்டியில் கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆதவன் வெள்ளிபதக்கம், ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீராம், ஜோஸ்வந்த் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் அஸ்வின்குமார் உள்ளிட்டோர் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் நந்த கோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை