மேலும் செய்திகள்
கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
06-Nov-2025
உடுமலை: மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், 26 பதக்கங்களை வென்று அசத்திய குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், அரசின் சார்பில் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான 2025-26ம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடந்தது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, முகமது அப்சல் மற்றும் கருப்புசாமி, 14 வயதிற்குட்பட்டோருக்கான கேரம் இரட்டையர் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில கேரம் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். நீச்சல் 14,17,19 வயதிற்குட்பட்டோருக்கான குழு போட்டி மற்றும் தனிநபர் போட்டிகளில், மொத்தம் 26 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தனிநபர் பிரிவில், முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஏழு பேர் மாநில நீச்சல் போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மாவட்ட கேரம் மற்றும் நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாரியப்பன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். உடற்கல்வி ஆசிரியர்கள் விஜய்ராகவன், சலுகாமா, சந்திரபாபு மற்றும் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வி, ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.
06-Nov-2025