மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை
19-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட செல்லம் நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில், திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கத்தின் சார்பில், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் மற்றும் மாணவ, மாணவியரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 'சின்டெக்ஸ் டேங்க்' அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா மற்றும் ரோட்டரி சங்கத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது. குமரன் ரோட்டரி சங்க தலைவர் துர்கா கந்தசாமி, செயலர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, ரிப்பன் வெட்டி துவக்கி பேசுகையில், ''ரோட்டரி சங்கத்தினரின் இப்பணியால் பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சூழலில் மாணவ, மாணவியரால் கல்வி கற்க முடியும்,'' என்றார்.
19-Oct-2025