உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புங்கமரத்து கருப்பராயன் கோவிலில் கும்பாபிஷேகம்

புங்கமரத்து கருப்பராயன் கோவிலில் கும்பாபிஷேகம்

அவிநாசி; அவிநாசி அருகே சேவூர் - சூரிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புங்கமரத்து கருப்பராயன், கன்னிமார் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தாராபுரம், வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் தலைவர் மவுன சிவாச்சல அடிகளார் தலைமையில், பனையந் தோட்டம் முத்துசாமி கவுண்டர் முன்னிலையில் நடைபெற்றது.முன்னதாக, 4ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் ஆகிய பூஜைகள், 5ம் தேதி வாஸ்து சாந்தி, ரக்க்ஷா பந்தனம், கலாகர்ஷனம் ஆகிய பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.நேற்று இரண்டாம் காலயாக பூஜையில் நாடி சந்தனம் கலச புறப்பாடுடன் ஸ்ரீ புங்க மரத்து கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேவூர், ராக்கம்பாளையம், அந்தியூர், கோயம்புத்துார் குல சொந்தங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி