விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்
உடுமலை; வினைதீர்க்கும் விநாயகர் கோவிலில் நடந்த, கும்பாபிேஷகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை வ.உ.சி வீதியில் உள்ள, வினைதீர்க்கும் விநாயகர் கோவில் கும்பாபிேஷ விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து புண்யாகவாசனம், கணபதி ஆவாஹனம், நவகிரக வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு, திரவியாகுதி, நடந்தது. மாலையில் வாஸ்துசாந்தி, காப்பு கட்டுதல், கலசஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் சிறப்பு ேஹாமங்களுடன் கும்பாபிேஷக பூஜை துவங்கியது.தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிேஷகத்துடன் அலங்காரம் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜை இன்று முதல் துவங்குகிறது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.