உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அய்யனார் பெரியசுவாமி கோவில் வரும் 16ல் கும்பாபிேஷகம் 

அய்யனார் பெரியசுவாமி கோவில் வரும் 16ல் கும்பாபிேஷகம் 

திருப்பூர்: திருப்பூர், எஸ்.பெரியாயிபாளையம், நொய்யல் கரை பகுதியில் பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத ஸ்ரீஅய்யனார் பெரிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு பாலவிநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், கருப்பராயர் மற்றும் சப்த கன்னிமார் கோவில்களும் உள்ளன.இக்கோவில்கள் புனரமைப்பு செய்து, திருப்பணி செய்யப்பட்டுள்ளது. வரும், 16ம் தேதி இதன் கும்பாபிேஷக விழா நடைபெறவுள்ளது.இதையொட்டி வரும், 13ம் தேதி, தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. 14ம் தேதி, கணபதி யாகம், லட்சுமி யாகம் மற்றும் நவக்கிரகயாகமும், தொடர்ந்து யாக சாலை நிர்மாணம் நடைபெறுகிறது. அன்று மாலை முதல் கால யாக பூஜை நடைபெறும்.வரும், 15ம் தேதி, காலை இரண்டாம் கால யாகமும், மாலை மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெறும். 16ம் தேதி காலை 6:00 மணிக்கு பால விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், கருப்பராயர் மற்றும் சப்த கன்னிமார் கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும்.பின், நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, அய்யனார் பெரியசுவாமி கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும். வரும் 14ம் தேதி இரவு, பவளக்கொடி வள்ளிகும்மி; 16ம் தேதி, வீணை இசை நிகழ்ச்சி நடைபெறும்.ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை