ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீஅய்யப்ப சுவாமி கோவிலில், சபரிமலையில் இருப்பது போல், தாந்த்ரீக முறைப்படி தினசரி வழிபாடு நடந்து வருகிறது. அனைத்து பண்டிகைகளும், மண்டலாபிேஷக பூஜைகளும் விமரிசையாக நடத்தப்படுகிறது.கோவிலில் கும்பாபிேஷக விழா, கடந்த, 27ம் தேதி துவங்கியது; தினமும், காலை மற்றும் மாலை என, இரண்டு வேளையும் யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது. இன்று அதிகாலை பூர்வாங்க பூஜைகளும், காலை, 6:10 மணி முதல், 7:20 மணி வரை, கும்பாபிேஷகமும் நடைபெற உள்ளது.நாளை, (3ம் தேதி) பரிவார மூர்த்திகளுக்கு பிரதிஷ்டா உச்ச பூஜை, பெரியபலிகள், அதிவாசம், அத்தாழ பூஜைகள் நடக்க உள்ளன. வரும், 4ம் தேதி அதிகாலை, பெரியபலிக்கல் பிரதிஷ்டா பூஜையும், அய்யப்ப சுவாமிக்கு 25 கலச பூஜை அபிேஷகமும், ஸ்ரீபூதாபலி பூஜையும், தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, காலேஜ் ரோடு, சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில், அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கும்பாபிேஷக விழாவையொட்டி, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.நேற்றிரவு புலவர் ராமலிங்கம் தலைமையிலான ஆன்மிக பட்டிமன்றம் நடந்தது. 'இறைவன் அருளை பெற வழிகாட்ட வல்லது... பக்தியா? தொண்டா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பக்தியே என்ற அணியில், ராமநாதபுரம் துரைபாண்டி, திருச்சி அன்னலட்சுமி, சென்னை விஜயகுமார், திருத்தணி வேதநாயகி ஆகியோர் பேசினர்.