உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லேப் - டாப் திருடியவர் கைது

லேப் - டாப் திருடியவர் கைது

திருப்பூர் : ரயில் பயணியிடம் லேப் - டாப்பை திருடியவரை திருப்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.தருமபுரி, கருதம்பட்டியைச் சேர்ந்தவர் ஆதிராம், 28. கோவைக்கு பணி நிமித்தமாக வந்த அவர் கடந்த, 19ம் தேதி காலை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தருமபுரி திரும்பினார். ரயில் திருப்பூரில் நின்று புறப்பட்ட போது அவரது லேப்- டாப் பையைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் தருமபுரி சென்றுவிட்டு, நேற்று திருப்பூர் வந்து ரயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல் பிளாட்பாரத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரித்த போது, ஆதிராமின் லேப் - டாப் பையைத் திருடியது அவர் தான் என்பது தெரிந்தது. அவரிடமிருந்து லேப் - டாப் பையை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூரூவைச் சேர்ந்த ஆஸ்கார், 53 என்ற அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை