ஆடை வினியோக சங்கிலி திட்டம் 6வது கட்ட துவக்க விழா
திருப்பூர்: தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சேவ்' ஏற்பாட்டில், பல பிராண்டுகள் பங்கேற்ற தென்னிந்திய ஜவுளி மற்றும் ஆடை வினியோக சங்கிலித் திட்டத்தின், 6வது கட்ட துவக்க விழா நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் பேசுகையில், ''நெறிமுறை பணி நடைமுறைகள், பொறுப்பான ஆட்சேர்ப்பு மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முன் முயற்சிகள் உட்பட இத்தகைய தொடர்புகள் வாயிலாக தொழிலாளர் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், உற்பத்தியாளர்களுக்கு நல்லெண்ணம் மற்றும் நேர்மறை நற்பெயர் வளர்க்கவும் முடியும்,'' என்றார். ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் இளங்கோ பேசுகையில், ''இத்தகைய அமர்வுகள் வாயிலாக, திருப்பூரின் பிராண்ட் பிம்பத்தை உலகளவில் வலுப்படுத்த உதவும். திருப்பூரை ஒரு தனித்துவமான மற்றும் பொறுப்பான உற்பத்தி கிளஸ்டராக மாற்றும்,'' என்றார்.