உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திருப்பூர்; திருவண்ணாமலை, போளூரைச் சேர்ந்த வக்கீல் குமரன் மீது ஆதமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்; தேனியில் இரண்டு வக்கீல்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவற்றைக் கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச் சேரியில் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர். நேற்று திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட்கள்; தாலுகா பகுதி கோர்ட்கள் ஆகியவற்றில் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் அனைத்து கோர்ட்களிலும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ