உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறக்குமதியைத் தவிர்ப்போம்... உள்நாட்டிலேயே தயாரிப்போம்

இறக்குமதியைத் தவிர்ப்போம்... உள்நாட்டிலேயே தயாரிப்போம்

திருப்பூர்: ''இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டிலேயே பொருட்கள் உற்பத்தி செய்ய தொழில்முனைவோர் முயற்சிக்க வேண்டும்'' என்று 'லகு உத்யோக் பாரதி' மாநில இணை பொதுச்செயலாளர் ஜெயேந்திரன் கூறினார்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில்கள்(சி.எஸ்.ஐ.ஆர்.,) தொழில்துறையினருக்கு தேவையான 2,600 தொழில்நுட்பங்களுக்கு உரிமம் பெற்றுள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வை 'லகு உத்யோக் பாரதி' அமைப்பு, '100 நாட்களில், 100 தொழில்நுட்பம்' என்ற திட்டம் மூலம் மேற்கொள்கிறது. திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) வளாகத்தில் நடந்த தொழில்நுட்ப பகிர்வு விழிப்புணர்வு கூட்டத்தை 'சைமா' தலைவர் ஈஸ்வரன், துணைத் தலைவர் பாலசந்தர், பொதுச்செயலாளர் கோவிந்தப்பன் உள்ளிட்டோர் துவக்கிவைத்தனர்.'லகு உத்யோக் பாரதி' மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், பொதுசெயலாளர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர். இதன் மாநில இணை பொதுச்செயலாளர் ஜெயேந்திரன் பேசியதாவது:பின்னலாடைத் தொழிலில் மட்டும் இருக்காமல், ஒரு சில நிறுவனங்கள் தான், அனைத்து வகை 'ஜாப் ஒர்க்' பிரிவுகளையும் இயக்குகின்றன. நுாற்பாலைகளும் வைத்துள்ளன. பல்வேறு தொழில்களில் நகர்ந்தால் மட்டுமே வெற்றியாளராக உருவாக முடியும். 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற உன்னத நிலையை அடைய, பல்வகை தொழில்களை செய்ய வேண்டும். உள்நாட்டு தேவைக்காகவும், உற்பத்திக்காகவும், பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். அதற்கு மாற்றாக, உள்நாட்டிலேயே பொருட்கள் உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், வளர்ச்சி நிலையை அடைய முடியும். லகு உத்யோக் பாரதி தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்க தயாராக இருக்கிறது.இவ்வாறு, ஜெயேந்திரன் பேசினார். 'சிட்பி' அதிகாரிகள், தொழிற்கடன் திட்டங்கள் குறித்து பேசினர். ----2 படங்கள்'சைமா' வளாகத்தில் நடந்த தொழில்நுட்ப பகிர்வு விழிப்புணர்வு கூட்டத்தில் 'லகு உத்யோக் பாரதி' மாநில இணை பொதுச்செயலாளர் ஜெயேந்திரன் பேசினார்.இதில் பங்கேற்றோர்.

'தேவையான திட்டங்கள்

பெறுவதில் முன்னோடி'நாடு முழுவதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெருக வேண்டும் என்ற நோக்குடன், மத்திய அரசிடம் இருந்து, தேவையான திட்டங்களை பெற்றுத்தருவதில் முன்னோடியாக இருக்கிறோம். 'லகு உத்யோக் பாரதி' நிர்வாகிகள், திருப்பூருக்கு இ.எஸ்.ஐ.,மருத்துவமனை கொண்டுவர முயற்சி எடுத்தோம். திருப்பூரில், குறு, சிறு தொழில்களை மேம்படுத்த தொடர்ந்து செயலாற்றுவோம்.- மோகனசுந்தரம், தேசிய இணை பொதுச்செயலாளர் லகு உத்யோக் பாரதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி