இதயம் காப்போம் இலவச பஸ் திட்டம்
திருப்பூர்; இதய நோயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த, காந்தி நகர் ரோட்டரி சங்கத்தின் முயற்சியால், 'இதயம் காப்போம்' என்ற பெயரில் இலவச பஸ் திட்டம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது.நாளை, (29ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு, தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் திட்ட துவக்க விழா நடக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, 1.30 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட, 'இதயம் காப்போம்' பஸ், ரேவதி மெடிக்கல் சென்டரிடம் அர்ப்பணிக்கப்படுகிறது.நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக கலெக்டர் கிறிஸ்துராஜ், சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), விஜயகுமார் (வடக்கு) ஆனந்தன் (பல்லடம்),மேயர் தினேஷ்குமார், டாக்டர் முருகநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.பின், 1.30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இதயம் காப்போம் பேருந்தை, ரேவடி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனரிடம், ரோட்டரி திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அர்ப்பணிக்க உள்ளனர்.