மேலும் செய்திகள்
தபால் தலை எழுத்து போட்டிக்கு அழைப்பு
08-Feb-2025
திருப்பூர்; திருப்பூர், தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:இந்திய தபால்துறை, உலகளாவிய தபால் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்த உள்ளது. முதல்கட்டமாக மாநில கடித போட்டி நடக்கவுள்ளது. ஒன்பது முதல், 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-, மாணவியர் பங்கேற்கலாம்.'கடிதம் எழுதும் தாங்களே தங்களை பெருங்கடல் என கற்பனையில் நினைத்துக்கொள்ளுங்கள்; பெருங்கடல் ஆகிய தங்களை மற்றவர்கள் ஏன், எப்படி கவனமாக நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்,' எனும் தலைப்பில், விளக்கி கடிதம் எழுத வேண்டும்.அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மூன்று போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் நகல் இணைத்து, கடிதத்தை ' தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் -641601' என்ற முகவரிக்கு வரும், 20ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். போட்டி நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு முறையே, 25 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தபால் துறையின் www.indiapost.gov.inஎன்ற இணையதளத்திலும் தகவல் அறியலாம்.
08-Feb-2025