உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எல்.ஐ.சி., முகவர்கள் போராட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் போராட்டம்

உடுமலை:உடுமலையில், எல்.ஐ.சி., முகவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை - பழநி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன், அனைத்திந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கமான 'லிங்காய்' உடுமலை கிளை சார்பில், எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு, போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி., யை நீக்க வேண்டும், முகவர்களுக்கான கமிஷன் சீரமைப்பை ரத்து செய்ய வேண்டும். பாலிசிக்கான வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும், முகவர்களுக்கான குழு காப்பீடு வயது வரம்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. 'லிங்காய்' சங்கத்தின் மண்டல பொருளாளர் லிங்கசாமி, ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். உடுமலை கிளைச்செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி., முகவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி