மேலும் செய்திகள்
லயன்ஸ் கிளப் சார்பில் கண் பரிசோதனை முகாம்
09-Oct-2025
திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் உலக லயன்ஸ் சேவை தின விழா நடந்தது. இதையொட்டி, வஞ்சிபாளையம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. காப்பக நிர்வாகிகள் அதைப் பெற்றுக் கொண்டனர். விழா நினைவாக காப்பக வளாகத்தில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சார்பில் மரக்கன்று நடப்பட்டது. சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட கவர்னர் ஜெயசேகரன், பட்டய தலைவர் வின்சென்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
09-Oct-2025