எழுத்தறிவு திட்டம் அடிப்படை தேர்வு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் 2026–2027ம் ஆண்டுக்கான தேர்வு, மாவட்டம் முழுவதும் இன்று (நவ.,15) நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த தேர்வு, 14 ஒன்றியங்களில் உள்ள 560 மையங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 14,006 பேர் பங்கேற்றனர். அதிகபட்சமாக உடுமலை ஒன்றியத்தில் 57 மையங்களில் 1,426 பேர் தேர்வெழுதினர். குறைந்தபட்சமாக குண்டடம் ஒன்றியத்தில் 556 பேர் பங்கேற்றனர். திருப்பூர் செல்லப்பபுரம், அரண்மனைப்புதுார் மாநகராட்சி பள்ளிகளில் நடந்த தேர்வை முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அடிப்படைத் தேர்வு நடந்தது.