| ADDED : நவ 19, 2025 04:49 AM
திருப்பூர்: மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா, கொடுவாய் சுப்பராய கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு வரவேற்றார். அமைச்சர் சாமிநாதன், கூட்டுறவு சங்க கொடியேற்றிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அமைச்சர் கயல்விழி, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினர். விழாவில், 540 பயனாளிகளுக்கு, 11.27 கோடி மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கடன், 'டோம்கோ' கடன், கால்நடை பராமரிப்பு, பயிர் கடன்கள் வழங்கப்பட்டன. வருவாய்த்துறை சார்பில், 47 பயனாளிகளுக்கு, 86.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4 ம் மண்டல தலைவர் பத்மநாபன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.