நாடு போற்ற வாழ்க...! சுந்தரமூர்த்தி சிவம் மணி விழா வைபவம்; வேதபாடசாலை முதல்வர்கள் வாழ்த்து
அவிநாசி; பெங்களூரு வேதாகம ஸ்மஸ்க்ருத மஹா பாடசாலை ஸ்ரீஸ்ரீ குருகுலம் வேத விஞ்ஞான மஹா வித்ய பீடம் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் -- மஹாலக்ஷ்மி ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி மணி விழா அவிநாசியில் நடந்தது.அவிநாசி, செந்துார் மஹாலில் நடந்த விழாவில், திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27வது குரு மஹா சந்நி தானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பெங்களூரு ஸ்ரீஞானாக் ஷி ராஜராஜேஸ்வரி தேவஸ்தான் சபேச சிவாச்சாரியார், கூனம்பட்டி ஆதினம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமி உட்பட ஆதினங்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின், ஆன்லைன் வாயிலாக ஆசியுரை வழங்கி, சுந்தரமூர்த்தி சிவாச்சார்யாருக்கு, 'கொங்கு நாட்டு ஆகமச் செம்மல்' என பட்டம் வழங்கி கவுரவித்தார். ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், குருத்துவ மிராஸ் சிவகுமார் குருக்கள் வரவேற்றார். பிள்ளையார்பட்டி சிவநெறி கழக வேதாகம பாடசாலை முதல்வர் பிச்சை சிவாச்சாரியார், மயிலாடுதுறை வேத சிவாகம பாடசாலை முதல்வர் ரவி சுவாமிநாத சிவாச்சாரியார், ஸ்ரீ ஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம் இயக்குனர் அபிராம சுந்தரம்சிவம், சென்னை காளிகாம்பாள் கோவில் காளிதாஸ சிவாச்சாரியார், திருநள்ளாறு தேவஸ்தானம் ராஜ சுவாமிநாத குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா முதல்வர் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில், தம்பதியருக்கு கலசாபி ேஷகம், மணி விழா நடைபெற்றது.அதை தொடர்ந்து, 'வேத வாழ்வின் ஆனந்த அறுபது' என்ற தலைப்பில், திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் சொற்பொழி நிகழ்த்தினார். அவிநாசி கோவில் குருத்துவ மிராஸ் ராஜ்குமார சிவம் நன்றி கூறினார்.