மேலும் செய்திகள்
குறைந்த நீரிலும் புதினா சாகுபடி
05-Jun-2025
உடுமலை; கிணற்று பாசனத்துக்கு குறைந்த செலவு பிடிக்கும், செடி அவரை சாகுபடியில் ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை பாப்பனுாத்து, விளாமரத்துப்பட்டி, சாளையூர் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக காய்கறி சாகுபடி செய்கின்றனர். இதில், அவரை சாகுபடி கணிசமான பரப்பளவில் சாகுபடியாகிறது.குறைந்த தண்ணீர் தேவை மற்றும் சாகுபடி செலவு குறைவாக உள்ளதால், கோடை கால சீசனில் நடவு செய்கின்றனர். செடிகள், 60 நாட்கள் வளர்ந்த பிறகு, அவரை அறுவடை செய்கின்றனர்.சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது. அறுவடை செய்த அவரையை உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.தற்போது பாப்பனுாத்து பகுதியில், சாகுபடி செய்யப்பட்டுள்ள அவரை செடிகளில், பூ விட்டு காய் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. வரும் பருவமழை சீசனில், சந்தைக்கு வரத்து குறைந்து, அவரைக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
05-Jun-2025