உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை; பேரூராட்சி துணைத்தலைவரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் தளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். கட்சியின், மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், தளி பேரூராட்சி துணைத்தலைவர் செல்வனை, பேரூராட்சி அலுவலகத்தில், தகாத வார்த்தைகளால், திட்டி, தாக்குதல் நடத்திய கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்டியல் இனத்தைச்சேர்ந்த துணைத்தலைவர், அச்சமில்லாமல் பணியாற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார மா.கம்யூ., கட்சியினர் மற்றும் மலைவாழ் சங்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றனர். போராட்டத்தையொட்டி, தளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை