மாயாஜால மயில் விருட்சமாகும் மரக்கன்றுகள்
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டத்தில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில், 10வது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வார நிலவரப்படி, 1.91 லட்சத்துக்கும் அதிகான மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு லட்சத்தை தாண்டி, இலக்கை நோக்கி பசுமைப்படை பயணிக்க உள்ளது. வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால், விவசாயிகள், இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தாராபுரம் தாலுகா, எழுகாம்வலசு கிராமத்தில், கமலீஸ்வரி என்பவருக்கு சொந்தமான கவுண்டன்தோட்டம் பகுதியில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. சந்தனம் -310, தேக்கு -50, மகோகனி -50 என, 410 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.இவை விரைவில் தோகை விரித்தாடும்மாயாஜால மயில் (மேஜிக் பீகாக்) போன்று, மரக்கன்றுகள் விருட்சமாக அங்கு பசுமையைப் பேணும்; இயற்கையைக் காக்கும்.