வாகனங்களின் விலையை மஹிந்திரா உயர்த்தாது
ம ஹிந்திரா நிறுவன செயல் இயக்குநர் ராஜேஷ் ஜெஜுரிகர் தெரிவித்துள்ளதாவது: அரசு, ஜி.எஸ்.டி., குறைப்பு எனும் முக்கியமான நடவடிக்கை எடுத்திருப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். ஜி.எஸ்.டி., குறைப்பை கெடுக்கும் விதமாக, விலையை உயர்த்துவதன் வாயிலாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எதையும் நாங்கள் செய்யப் போவதில்லை. எனவே, பெரியளவில் உற்பத்தி செலவு அதிகரிக்காதபட்சத்தில், ஜனவரியில் மஹிந்திரா வாகனங்களின் விலை உயராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.