உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்கள் பராமரிப்பு தீவிரம்

ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்கள் பராமரிப்பு தீவிரம்

திருப்பூர்; வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ் வரர், வீரராகவப்பெருமாள் கோவில்களின் தேர்கள் பராமரிப்புப்பணி தீவிரமாக நடைபெறுகிறது.திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி(ஈஸ்வரன்), வீரராகவ பெருமாள் (பெருமாள்) கோவிலில், வைகாசி விசாக தேர்த்திருவிழாவுக்கு ஒரு மாதமே உள்ளது.பல ஆண்டுகள் ஆனதால் தேர்களின் மேற்புற பலகைகள் சேதமாகி இருந்தன. தேர் சாரம் அமைக்கும்போது சரியாக பொருந்தாத நிலை இருந்தது. அறங்காவலர் குழு முடிவுப்படி உபயதாரர் நிதி உதவியுடன், தேர் பராமரிப்பு பணி கடந்த 10 நாட்களுக்கு முன் துவங்கியது. பிரத்யேகமாக வேங்கை மர பலகைகள் வாங்கப்பட்டு, திருச்சியை சேர்ந்த தேர் ஸ்தபதிகள் குழுவினரால் தேர் பராமரிப்பு பணி நடந்தது.சேதமடைந்த பகுதிகள் மாற்றப்பட்டு, புதிய பலகைகள் பொருத்தி தயார் செய்யப்பட்டுள்ளது. தேருக்கு வார்னிஷ் அடித்து சக்கரங்களுக்கு பெயின்ட் அடித்து, முழு அளவில் தயார்படுத்த முடிவு செய்துள்ளதாக கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை