உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு

மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.விவசாயிகள் மக்காச்சோளத்தை உடுமலை ஒழுங்கு முறைவிற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.இதனால், தினமும் மக்காச்சோளம் ஏலம் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, 3 விவசாயிகளின், 290 மூட்டை அளவுள்ள, 17.513 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.இ-நாம் திட்ட ஏலத்தில், ஒரு குவிண்டால் மக்காச்சோளம், ரூ. 2,350 முதல், ரூ. 2,400 வரை ஏலம் போனது. இதன் மதிப்பு, 4 லட்சத்து, 18 ஆயிரத்து, 931 ரூபாயாகும், மேலும் விபரங்களுக்கு,விற்பனைக்கூட கண்காணிப்பாளர், செந்தில்குமார், 94439 62834 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை