மக்காச்சோளம் சாகுபடி; விவசாயிகளுக்கு அறிவுரை
உடுமலை; மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகள் அடியுரம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு இடுமாறு, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: உடுமலை பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். விதைப்புக்கு முன் உழவு செய்யும் போது, ஏக்கருக்கு, 2 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை, அடியுரமாக போட வேண்டும். டி.ஏ.பி., உரம் போட வேண்டியதில்லை. மேலும், ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு வீதம் இடும்போது, படைப்புழு தாக்குதல் வருவதில்லை. எனவே, இந்த இரு தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.