போலி ஆவணங்கள் பயன்படுத்தி 439 சிம் கார்டுகள் விற்றவர் கைது
திருப்பூர்; திருப்பூர், வள்ளியம்மை நகரில் சட்ட விரோதமாக சிலர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு விற்பனை செய்வது குறித்து 'டிராய்'ல் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதுதொடர்பாக மாநகர சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியை கண்காணித்தனர். அதில், ஷாகுல் ஹமீது, 37 என்பவர், 260 நபர்களின் போட்டோவை பயன்படுத்தி, போலி ஆதார் கார்டு தயார் செய்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உண்மையான ஆவணம் போல் ஆன்லைனில் அனுப்பி, 439 சிம் கார்டுகளை விற்பனை செய்தது தெரிந்தது.அவரை சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.