மணி பப்ளிக் அகாடமி மாணவர்கள் அபாரம்
திருப்பூர்; திருப்பூரில் உள்ள மணி பப்ளிக் அகாடமி பள்ளி மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.திருப்பூர், தில்லை நகரில் இயங்கி வரும், மணி பப்ளிக் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வில் பள்ளியில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.பிளஸ் 2 வகுப்பில், அருண், 582 மதிப்பெண் பெற்று முதலிடம், தேஜினி, 557 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பூமிகா, 551 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில், ரோஹித், தேஜினி ஆகியோர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். பத்தாம் வகுப்பில், மகிழ்ஸ்ரீ, 490 மதிப்பெண் பெற்று முதலிடம், தர்ஷினி, 473 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், சோபியா பர்வீன், 470 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பிடித்தனர். சமூக அறிவியலில் தர்ஷினி, மகிழ் ஸ்ரீ நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.பிளஸ் 2வில், 500க்கு மேல், 15 மாணவர்கள் பெற்றனர். பத்தாம் வகுப்பில், 450க்கு மேல், 16 மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை மணி பப்ளிக் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.