மேலும் செய்திகள்
நாதம்பாளையம் மாரியம்மன் கோவில்
10-Apr-2025
தேவம்பாளையம் கோவில்
11-Apr-2025
அவிநாசி; அவிநாசி தாலுகா, செம்பியநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை கவுண்டன்புதுாரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் பூச்சாட்டு விழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதல், பொரி மாற்றுதல், கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல், பொங்கல் வைத்தல், கம்பம் பிடுங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகளுடன் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது.கோவில் விழா கமிட்டி மற்றும் ஊர் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
10-Apr-2025
11-Apr-2025