உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமரச மைய செயல்பாடு; துண்டு பிரசுரம் வழங்கல் 

சமரச மைய செயல்பாடு; துண்டு பிரசுரம் வழங்கல் 

திருப்பூர் : நீதித்துறையில் செயல்படும் சமரச மையம் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழக சமரச மையம் மாநில அளவில் நீதித்துறையில், மாவட்டம் தோறும் சமரசமையங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இம்மையங்கள் மூலம் கோர்ட்டில் விசாரணையில் உள்ள வழக்குகளை அனுப்ப கோரலாம். அதன் மூலம் நேரடியாக விரைவான சமரசத்துக்கு வழி ஏற் படுத்தலாம். இதுபோல் செயல்படும் சமரச மையங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கும் வகையில் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் இதை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குணசேகரன் துவக்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் செல்லதுரை, செயலாளர் விக்னேஷ் மது முன்னிலை வகித்தனர். நீதிபதிகள் பத்மா, கோகிலா, ஸ்ரீதர், சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி சுந்தரம் மற்றும் நடுவர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ