உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாற்றுத்திறன் குட்டீஸூக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்

 மாற்றுத்திறன் குட்டீஸூக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்

திருப்பூர்: மாற்றுத்திறன் குழந்தைகள், அவர்களின் பெற்றோர், பாதுகாவலர் சிரமங்களை போக்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட கல்வித்துறை சார்பில், 2026 ஜன. 9ம் தேதி வரை, அனைத்து வட்டாரங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட உள்ளது. இன்று குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நாளை (10ம் தேதி) தேவங்காபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது. வரும், 12ம் தேதி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஜன. 5ல் பொங்கலுார், பி.வி.கே.என்., துவக்கப்பள்ளியிலும், ஜன. 7ல் மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஜன. 8 மற்றும் 9ம் தேதிகளில் முறையே உடுமலை மற்றும் காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் முகாம் நடக்கிறது. பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பர். மாற்றுத்திறன் குழந்தைகளை இலவசப் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவைப்படும் உதவி, மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு ஆலோசனை வழங்குவர். மருத்துவ சான்றிதழ் வழங்கல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு உள்ளிட்டவையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை