மேலும் செய்திகள்
நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்
03-Aug-2025
அனுப்பர்பாளையம் : -திருப்பூர் மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, மேயர் தினேஷ் குமார், ஆகியோர் பார்வையிட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். மாநகராட்சி மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெயந்தி, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பத்மினி, மாநகர நகர் நல அலுவலர் முருகானந்த் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள், மகப்பேறு, மகளிர், எலும்பு, கண், பல், இருதயம், காது மூக்கு தொண்டை மற்றும் சித்தா, ஆயுர்வேதம், இயன்முறை உள்ளிட்ட பல்வேறு மருத்துவத்துறை மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி களுக்கு அடையாள அட்டை, முதல்வர் காப்பீடு அட்டை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது. முகாமில், 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்கள் உடலை பரிசோதனை செய்து கொண்டனர்.
03-Aug-2025