உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

திருப்பூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், மருத்துவ முகாம் நடைபெற்றது. அன்புக்கரங்கள் திட்டத் தில் உதவித்தொகை பெற்றுவரும் குழந்தைகளுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வட்டார அளவில் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 237 குழந்தைகளுக்கு, சத்து குறைபாடு, தோல், கண் பாதிப்புகள் உள்பட 30 வகையான நோய்பாதிப்புகள் தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தைகளுக்கு விளையாட்டு, நடன நிகழ்ச் சிகள் நடைபெற்றன. திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1098 சைல்டு ஹெல்ப் லைன் சேவைமையம் துவக்கிவைக்கப்பட்டது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, சேவை மையத்தை திறந்து வைத்தார்; தொடர்ந்து குழந்தைகள் உரிமையை உறுதி செய்யும்வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா, குழந்தைகள் நலக்குழு தலைவர் லுார்துமேரி, உறுப்பினர்கள் பாரதி, சிவராஜ் மோகன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், போலீசார் பங்கேற்றனர். குழந்தைகள் மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ