உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் மெகா ரத்த தான முகாம்

பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் மெகா ரத்த தான முகாம்

திருப்பூர்; திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி., பள்ளியின் இன்டரேக்ட் கிளப், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன், ஐ.எம்.ஏ., ரத்த வங்கி ஆகியன இணைந்து பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின. ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் பழனிசாமி வரவேற்றார். ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, 'தானத்தில் சிறந்தது ரத்ததானம்' என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக மெய் நம்பி, கவுரவ விருந்தினர்களாக மாவட்ட ரத்த தான முகாம் தலைவர் கமலா பாஸ்கர், ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் பிரியாராஜா உள்பட பலர் பங்கேற்றனர். தொண்ணுாறுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ