உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரம் பதிவு; தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரம் பதிவு; தொழிலாளர் துறை அறிவுறுத்தல்

திருப்பூர்; புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு நலன்கருதி, அவர்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டுமென, தொழிலாளர்துறை அறிவுறுத்தியுள்ளது. தொழிலாளர் துறை அதிகாரிகள் உத்தரவின்படி, கடந்த மாதம் முழுவதும், தொழிலாளர் நல சட்டங்கள் தொடர்பான ஆய்வு நடந்தது. எடையளவு சட்டம் சரிபார்ப்பு ஆய்வில், எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரை இல்லாதது என, 23 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது, உள்ளிட்ட குற்றம் கண்டறியப்பட்டு, உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை: மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சான்று புதுப்பிக்கப்பட வேண்டும். மேலும், 25க்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர், ஐந்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர் இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளி பங்குதொகையாக, 20 ரூபாய், நிறுவன பங்களிப்பு, 40 ரூபாய் என, 60 ரூபாயை, lwmis.lwb.tn.gov.inஎன்ற இணையதளம் முகவரியில், நலவாரிய பங்களிப்பாக செலுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு மையம் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் அளிக்க உரிய வசதி செய்ய வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களும் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலா ளர்களின் விபரங்களை, labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழியில் ஈடுபடுத்தக்கூடாது. வளரிளம் பருவத்தினரை அபாயமற்ற பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், தொழிலாளர் துறை மற்றும் தொழிற்சாலை துறைக்கு உரிய அறிவிப்பு செய்து அனுமதி பெற வேண்டும். இணையம் சார்ந்த தொழில்கள், அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் பணிபுரிந்து வரும் ESI, PF கீழ் வராத 60 வயதிற்குட்பட்ட டிரைவர்கள் மற்றும் நடத்துனர் உள்ளிட்டஅனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும், https://eshram.gov.inஎன்ற முகவரியில் நேரடியாகவும், இ-சேவை மையம் மூலமாகவும் பதிவு செய்யலாம். குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த புகார்களை pencil Portal என்ற வலைதளத்திலும், 1098 என்ற 'டோல்ப்ரீ' எண்ணிலும் தெரிவிக்கலாம். கொத்தடிமை தொழிலாளர் குறித்த புகாரை, 1800 4252 650 என்ற எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். வெளி மாநிலத் தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான புகாருக்கு 1077, சட்டமுறை எடையளவுச் சட்டம் தொடர்பான புகாருக்கு 1915 மற்றும் 1800 114 000 என்ற எண் அல்லது, pgportal.gov.in/cpgoffice என்ற தளத்தில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். தொழிலாளர் துறையின் வலைதள முகவரி www.labour.tn.gov.inமற்றும் அமைப்புசாரா தொழிலாளருக்கான விவரங்களை பதிவு செய்ய, eshram.gov.in, புலம்பெயர்ந்த தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய, www.labour.tn.gov.in/ism ஆகிய இணையதள முகவரியை பயன்படுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை