உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நல வாரியம் குறித்து தவறான கருத்து: பூசாரிகள் லகலக புகார்

நல வாரியம் குறித்து தவறான கருத்து: பூசாரிகள் லகலக புகார்

பல்லடம் : நல வாரியம் குறித்து தி.மு.க., அரசு தவறான கருத்து கொண்டுள்ளதாக, கோவில் பூசாரிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:பூசாரிகள் நல வாரியம் என்பது, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என, தி.மு.க., அரசு தவறாக கருதி வருகிறது. இதன் காரணமாகவே, நல வாரியத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட பூசாரிகள் நல வாரியம், அ.தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டது. மீண்டும் தி.மு.க., பொறுப்பேற்றுள்ள தி.மு.க, மீண்டும் பூசாரிகள் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்து, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. இது தொடர்பாக, முதல்வர் மற்றும் அமைச்சர்களை பலமுறை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.மேலும், கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., அரசு இதை வாக்குறுதியாகவும் அளித்துள்ளது. பல்வேறு துறை சார்ந்த நல வாரியங்களும் உயிரூட்டப்பட்டு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற பூசாரிகள் நல வாரியத்துக்கு அலுவல் சாரா உறுப்பினர்களை கூட நியமிக்கவில்லை.இது தமிழகம் முழுவதும் உள்ள ஆறு லட்சம் பூசாரிகளின் கோரிக்கையாகும்.நல வாரியம் அமைக்கப்படாததால், நலிவடைந்த பூசாரிகள் பலரும் அரசின் நலத்திட்டங்களை பயன்பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். விரைவில், பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தாவிட்டால், தமிழக அளவில் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும் என, பூசாரிகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, பூசாரிகள் நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை